மேற்கூரை இயல்பு கூறியது

103.துங்க பத்திரைச் செங் களத்திடைச்
       சோள சேகரன் வாளெ றிந்தபோர்
வெங்க தக்களிற் றின்ப டத்தினால்
      வெளிஅ டங்கவே மிசைக விக்கவே

     (பொ-நி.) சோளசேகரன்,    செங்களத்திடை,    எறிந்த  களிற்றின் படத்தினால் மிசை கவிக்க; (எ-று.)

     (வி-ம்.)  செங்களம்-போர்க்களம்,  சோளன்-சோழன்-குலோத்துங்கன். கதம்-சினம். வெளி அடங்க-வெற்றிடமில்லாது மறையும்படி.  படம்-முகபடாம். மிசை-கூரை.                                                  (7)