அணி செயல் வகை கூறியது

106.மயிற்கழுத்தும் கழுத்தரிய மலர்ந்தமுகத்
       தாமரையும் மருங்கு சூழ்ந்த
எயிற்கழுத்தும் நிணக்கொடியும் இளங்குழவி
      பசுந்தலையும் எங்கும் தூக்கி.

     (பொ-நி.)  மயில்   கழுத்தும்,   முகத்தாமரையும்,  நிணக்கொடியும், பசுந்தலையும் எங்கும் தூக்கி; (எ-று.)

     (வி-ம்.) கழுத்தரிதல் தேவிக்குப் பலி இடற்கு. மருங்கு-பக்கம். எயில்
-மதில்.  அழுத்தல்-செருகுதல்.  நிணக்கொடி-கொழுப்பாலான  கொடிச்சீலை. பசுந்தலை-இளமையுள்ள  தலை.  குழவி-குழந்தை.                  (10)