ஆறுமுகன் வணக்கம் 11. | பொன்னிரண்டு வரைதோற்கும் பொருவரிய | | நிறம்படைத்த புயமும் கண்ணும் பன்னிரண்டும் ஆறிரண்டும் படைத்துடையான் அடித்தலங்கள் பணிதல் செய்வாம். | 12. | ஓரிரண்டு திருக்குலமும் நிலைபெறவந்து | | ஒருகுடைக்கீழ்க் கடலுந் திக்கும் ஈரிரண்டு படைத்துடைய இரவிகுலோத் தமனபயன் வாழ்க வென்றே. | (பொ-நி) நிலைபெறவந்து, கடலும் திக்கும் படைத்துடைய அபயன ்வாழ்க என்று, புயமும் கண்ணும் பன்னிரண்டும் ஆறிரண்டும் உடையான் அடித்தலங்கள் பணிதல் செய்வாம்; (எ-று.) (வி-ம்.)இரண்டு பொன்வரை தோற்கும்என இயைக்க. இணைப்புயங்களுக்கு இருவரை உவமை என்க.பொரு-ஒப்பு, புயம்-தோள். இரண்டு குலம்-தாய்தந்தையர் குலம். ஈரிரண்டுகடலும் திக்கும் என இயக்க. இரவி-ஞாயிறு. குலோத்தமன்; குல+உத்தமன். தன் மரபிற் சிறந்தவன், மேலானவன். ஈண்டும் ஆட்சிப் பரப்பே குறிக்கப்பட்டது. (11, 12) |
|
|