பலியிட்ட தலை இயல்பு கூறியது 112. | நீண்டபலி பீடத்தில் அரிந்து வைத்த | | நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ அணைதலும்அச் சிரம்அச்ச முறுத்து மாலோ. | (பொ-நி.) ஆண்டலைப்புள், வைத்த சிரத்தை இனமென்றெண்ணி, அணைந்து பார்க்கும்;அச்சிரம் அச்சுறுத்தும்; (எ-று.) (வி-ம்.) பலிபீடம்-பலிக்கடன் செலுத்தும் மேலிடம். குஞ்சி-மயிர்முடி. சிரம் - தலை. ஆண்டலைப்புள் - ஆண்டலை என்னும் பறவை. அருகு -தன்பக்கம். அணைதல் - சேர்தல். (16) |