உடல் கண்ட பேய்நிலை கூறியது 113. | கடன மைந்ததுக ருந்தலைஅ ரிந்த பொழுதே | | கடவ தொன்றுமிலை என்றுவிளை யாடு முடலே உடல்வி ழுந்திடின்நு கர்ந்திடஉ வந்த சிலபேய் உறுபெ ரும்பசிஉடன்றிடஉ டன்திரியுமே. |
(பொ-நி.) உடல் " அரிந்தபொழுதே கடன் அமைந்தது கடவதொன்றுமிலை" என்று விளையாடும், பேய் பசி உடன்றிட உடன் திரியும்; (எ-று.) (வி-ம்.) கடன்-நாம் செய்யவேண்டிய கடன். கடவது- செய்யக்கடவது. உவந்த-விரும்பிய. உறு-மிக்க. உடன்றிட- வருத்த. உடன்- அவ்வுடலுடன். திரியும்-செல்லா நிற்கும். உடல் துள்ளிக்கொண்டிருத்தலின், அருகே செல்ல அஞ்சி நின்றன பேய்கள் என்க. (17) |