எருமைக்கடாப் பலி கூறியது
 
114.பகடி டந்துகொள்ப சுங்குருதி இன்று தலைவி
      பலிகொள் என்றகுரல் எண்டிசைபி ளந்துமிசைவான்
முகடி டந்துரும் எறிந்தெனமு ழங்க உடனே்
     மொகுமொ கென்றொலிமி குந்தமரு கங்கள் பலவே.

     (பொ-நி.) " தலைவீ,  இன்றுகுருதிகொள்,  பலிகொள்"்  என்றகுரல்,
பிளந்து,  இடந்து,  முழங்க,உடனே,  தமருகங்கள்  ஒலிமிகும்;  (எ-று.)

     (வி-ம்.)  பகடு-எருமைக்கடா.  இடத்தல்-பிளத்தல்.  கொள்-கொண்ட. பசுங்குருதி-பச்சிரத்தம்.  இன்று-இப்பொழுது.  முகடு - உச்சி.  உரும் - இடி. எறிந்தஎன-இடித்தாற்போல. மொகு  மொகு  என்பன,  ஒலிமிகுதி  குறிக்கும் இடைச்சொல். தமருகம் -உடுக்கை.                                (18)