யோகினியர் இயல்பு கூறியது. 116. | படைவ லங்கொடுப சுந்தலைஇ டங்கொ டணைவார் | | இடைமொ ழிந்து இடைநு டங்கவரு யோகினிகளே. |
(பொ-நி.) மொழிந்து. நுடங்கவரு யோகினிகள் வலங்கொடு இடங்கொடு அணைவார்; (எ-று.) (வி-ம்.) படை - வாள். இடம் - இடப்பக்கம். கொடு - கொண்டு. இடைமொழிதல் - இடையிடையே சில பேசிக்கொள்ளுதல். இடைநுடங்க -இடுப்புத் துவள. யோகினி-காளியின் பரிவார மகளிர். (20) |