பேய் இயல்பு கூறியது

117.வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறுந்
       திசைதோறும் விழித்து நின்று
தூங்குதலை சிரிப்பனகண் டுறங்குதலை
      மறந்திருக்கும் சுழல்கட் சூர்ப்பேய்.

     (பொ-நி.) பேய், மிசைதோறும் திசைதோறும் தலை  விழித்து  நின்று சிரிப்பன கண்டு உறங்குதலை மறந்திருக்கும்; (எ-று.)

     (வி-ம்.)  வீங்குதல்-பருத்தல். நெடுங்கழை-நீண்ட மூங்கில். தூங்குதல்
-தொங்குதல். உறங்குதல்-துயிலுதல்.  சுழல்கண்-சுழற்சி  கொண்ட  கண். சூர்
-அச்சம்.                                                    (21)