பலிஇட்ட தலை இயல்பு கூறியது

118அரிந்ததலை உடனமர்ந்தே ஆடுகழை
    அலைகுருதிப் புனலின் மூழ்கி
இருந்தவுடல் கொளக்காலன் இடுகின்ற
   நெடுந்தூண்டில் என்னத் தோன்றும்.

     (பொ-நி.)
தலையுடன் ஆடு கழை காலன் இடுகின்ற தூண்டில் என்னத் தோன்றும்; (எ-று.)

     (வி-ம்.) அரிந்த-அறுத்த. அமர்ந்து-பொருந்தி. கழை-மூங்கில். காலன்
- இயமன். குருதியாகிய தண்ணீரில் உடலாகிய மீனைப் பிடிக்க மூங்கிலாகிய
தூண்டிலை இயமனாகிய தூண்டிற்காரன் இட்டதுபோன்று என்க.       (22)