காளி கோயிலின் சூழலிட இயல்பு கூறியது

120.நிணமும் தசையும் பருந்திசிப்ப
    நெருப்பும் பருத்தி யும்போன்று
பிணமும் பேயும் சுடுகாடும்
   பிணங்கு நரியும் உடைத்தரோ.

     (பொ-நி.) நெருப்பும் பருத்தியும் பிணமும் பேயும் சுடுகாடும் நரியும்
உடைத்து; (எ-று.)

     (வி-ம்.)நிணம் - கொழுப்பு. தசை-சதை; இறைச்சி. இசிப்ப - இழுப்ப. பருத்தி-செம்பருத்தி. பொன்றுதல் - இறுத்தல். பிணங்குதல் - சண்டையிடல். உடைத்து-உடையது.                                           (24)