கூத்தின் சிறப்புக் கூறியது 123. | அரவொடு திக்கயமப் பொழுதுப ரித்தவிடத்து | | அடியிட உட்குழிவுற்று அசைவுறும் அப்பொழுதில் தரணித ரித்ததெனப் பரணிப ரித்தபுகழ்ச் சயதர னைப்பரவிச் சதிகொள்ந டத்தினளே. |
(பொ-நி.) திக்கயம் பரித்த இடத்து, அடி இட அசைவுறும் அப்பொழுதில் (சயதரனால்) தரணி தரித்ததென, சயதரனைப் பரவி, சதிகொள் நடத்தினள்; (எ-று.) (வி-ம்.) அரவு - ஆதிசேடன். திக்கயம் - திசையானை. அப்பொழுது -அந்தக்காலம். (குலோத்துங்கன் தாங்குதற்கு முன்) பரித்தல் - தாங்குதல். அடிஇட-கூத்தியற்ற; தன் கால்களை வைக்க. உள்குழிவு உற்று - உள்ளே பள்ளமாகி. தரணி - உலகம். தரித்தது - குலோத்துங்கன் தாங்கியமையின் நிலைபெற்றது. பரணிபரித்த புகழ்-பரணிபாடற்கேற்ற புகழையுடைய. சயதரன் -குலோத்துங்கன்; வெற்றி பூண்டவன் என்பது பொருள். பரவி-புகழ்ந்து. சதி -தாள அறுப்பு. (3) |