தனத்தின் சிறப்புக் கூறியது 124. | தணிதவ ளப்பிறையைச் சடைமிசை வைத்தவிடைத் | | தலைவர்வ னத்தினிடைத் தனிநுகர் தற்குநினைத்து அணிதவ ளப்பொடியிட்டு அடையவி லச்சினையிட்டு அமுதமி ருத்தியசெப் பனையத னத்தினளே. | (பொ-நி.) தலைவர் நுகர்தற்கு நினைத்து, பொடி இட்டு, இலச்சினை இட்டு, அமுதம் இருத்திய செப்பு அனைய தனத்தினள்; (எ-று.) (வி-ம்.) தணி-வெம்மையைக் குறைக்கின்ற; தண்ணிய எனற்பாலது தணி என நின்றது, குளிர்ந்த என்றவாறு, தவளம், வெண்மை. விடை-எருது. தலைவர் - சிவன். வனம் - காடு. தனி நுகர்தல் - தாமே கொள்ளுதல். தவளப்பொடி - வெண்ணீறு. இலச்சினை - முத்திரை. வெண்ணீறே இலச்சினையாம் என்க. அரும்பொருளாதற் கேற்ப, முத்திரை இட்டுப் பாதுகாக்கப்பட்டதென்றவாறு. செப்பு - செப்புக்கிண்ணம். (4) |