வயிற்றின் சிறப்புக் கூறியது 126. | கலைவளர் உத்தமனைக் கருமுகில் ஒப்பவனைக் | | கரடத டக்கடவுட் கனகநி றத்தவனைச் சிலைவளை வுற்றவுணத் தொகைசெக விட்டபரித் திறலவ னைத்தரும்அத் திருஉத ரத்தினளே. |
(பொ-நி.)் உத்தமனை, முகில் ஒப்பவனை, கனகநிறத்தவனை, திறலவனை, தரும்அத்திரு உதரத்தினள்; (எ-று.) (வி-ம.்) உத்தமன் - பிரமன். முகில் ஒப்பவன் - திருமால். கரடம் -மதம் பாய் சுவடு. கனகம்-பொன். கனக நிறத்தவன்-யானைமுகன். அவுணர ்-அசுரர். செக-அழிய. பரி-மிக்க. திறலவன்-முருகன். தரும்-பெற்ற. திரு -அழகு. உதரம்-வயிறு. (6) |