கையின் சிறப்புக் கூறியது

128.அரியுமி டற்றலையிட்டு அலைகுரு திக்கெதிர்வைத்து
      அறவும டுத்தசிவப் பதனைமு ழுத்திசையின்
கரிகர டத்தொளையின் கலுழியி டைக்கழுவிக்
     கருமைப டைத்தசுடர்க் கரகம லத்தினளே.

     (பொ-நி.) குருதிக்கு  எதிர்வைத்து  மடுத்த,  சிவப்பதனைக்  கலுழி
இடைக்கழுவிக் கருமை படைத்த கர கமலத்தினள். (எ-று.)

     (வி-ம்.) அரியும்-அறுக்கும். மிடறு-கழுத்து.  அலையிட்டு-அலையை
உண்டாக்கி, அலை-நான்குபுறமும் பரக்கின்ற. குருதி-செந்நீர் .எதிர்வைத்தல்
-மொள்ளுதல். மடுத்தல்-பருகல்.  கரி-யானை.  கலுழி-வெள்ளம். கரகமலம்
்-கைத்தாமரை.                                               (8)