வாயின் சிறப்புக் கூறியது

130.உருகுத லைத்தொ டையற்கு வமைய றச்சுழல்வுற்று
     உலவுவி ழிக்கடைபட்டு உடல்பகை யற்றொழியத்
திருகுரவைக் கிளவிச் சிறுகுத லைப்பவளச்
   சிறுமுறு வற்றரளத் திருவத னத்தினளே.

     (பொ-நி.) விழிக்கடைபட்டு, உருகு தலைத் தொடையற்கு உடல்பகை அற்று ஒழிய, குரவை, குதலை, முறுவல் தரளத் திருவதனத்தினள்; (எ-று.)

     (வி-ம்.)  உருகு  -  ஆசையால்  உருகுகின்ற  தலைதொடையன் -
தலைமாலையணிந்த  சிவன். சுழல்வுற்று- சுழன்று. விழிக்கடை -கடைக்கண்
பார்வை . உடல்பகை - காமநோய்.  குரவை- நாவை   உருட்டிச் செய்யும்
மகிழ்ச்சியொலி. பவளச் சிறுமுறுவல் -பவளம் போன்ற உதட்டில் தோன்றும
புன்முறுவல்.  தரளம் - பற்களாகிய முத்துக்கள். வதனம்-முகம். விழிக்கடை
எழுப்பிய காமநோய்  ஒழியுமாறு  செய்தன குரவை, குதலை, முறுவல் என
இவை என்க.                                               (10)