திருமுகச் சிறப்புக் கூறியது

131.அருமறை யொத்தகுலத்து,அருணெறியொத்த குணத்து
     அபயனு தித்தகுலத்து உபயகு லத்துமுதல்
திருமதி யொக்குமெனத் தினகர னொக்குமெனத்
   திகழ்வத னத்தினிடைத் திலகவ னப்பினளே.

     (பொ-நி.)  அபயன் உதித்த  உபயகுலத்து முத(லாகிய)மதி, தினகரன் ஒக்குமென, வதனத்திடை, திலக வனப்பினள். (எ-று.)

     (வி-ம்.)   குலத்து   -   குல    ஒழுக்கத்தினையுடைய.   குணத்து
குணத்தினையுடைய. குலத்து-மேன்மையான. உபய குலம்-தந்தைதாயர் குலம்.
முதல் - முதல்வனாகிய. மதி - திங்கள். தினகரன் - ஞாயிறு. வதனம்-முகம்.
திலகம் - பொட்டு. வனப்பு-அழகு.                               (11)