பேருருவச் சிறப்புக் கூறியது

132.அண்டமுறு குலகிரிகள்
     அவளொருகால் இருகாதில்
கொண்டணியின் குதம்பையுமாம்
   கோத்தணியின் மணிவடமாம்.

    (பொ-நி.) அவள், குலகிரிகள்(ஐ)காதிற்கொண்டணியின் குதம்பையாம்; கோத்தணியின் மணிவடமாம்; (எ-று.)

     (வி-ம்.) அண்டம் - உலகம். கிரி - மலை.  ஒருகால் - ஒரு  சமயம்.
குதம்பை-காதோலை. வடம்-மாலை.                             (12)