இதுவும் அது

133. கைம்மலர்மேல் அம்மனையாம்
     கந்துகமாம் கழங்குமாம்
அம்மலைகள் அவள்வேண்டின்
   ஆகாத தொன்றுண்டோ.

     (பொ-நி.)  அம்மலைகள்,  அம்மனையாம், கந்துகமாம், கழங்குமாம்;
வேண்டின்  ஆகாதது  ஒன்று  உண்டோ; (எ-று.)

     (வி-ம்.) அம்மனை-அம்மனை விளையாட்டுக்கருவி.  கந்துகம்-பந்து.
கழங்கு-கழற்சிக்காய்.                                        (13)