பேய்களின் கைகால் இயல்பு கூறியது

135. பெருநெ டும்பசி பெய்கல மாவன
     பிற்றை நாளின்முன் னாளின் மெலிவன
 கருநெ டும்பனங் காடுமு ழுமையுங்
   காலுங் கையுமு டையன போல்வன.

     (பொ-நி.) பசிபெய் கலமாவன; மெலிவன; கையும் காலும் உடையன; பனங்காடு போல்வன; (எ-று.)

     (வி-ம்.) கலம் - ஏனம். பிற்றை நாள் - மறுநாள். கரு-கருமை நிறம்.
மெலிவன பசியா லென்க.                                     (2)