வாய், வயிறு முழந்தாள் இயல்பு கூறியது

136. வன்பி லத்தொடு வாதுசெய் வாயின
  வாயி னால்நிறை யாதவ யிற்றின
முன்பி ருக்கின்மு கத்தினு மேற்செல
   மும்மு ழம்படும் அம்முழந் தாளின.

    (பொ-நி.)     வாயின,      வயிற்றின,      முழந்தாளின; (எ-று.)

     (வி-ம்.)  பிலம்    -   குகை.    வாதுசெய்தல்-(தாமே   பெரியன
என்று)வழக்கிடல்.   இருக்கின்-குத்துக்காலிட்டு உட்கார்ந்தால்.  முகத்தினும்
மேற்செல-அவற்றின்   முழந்தாள்  அவற்றின்  முகத்துக்கும்  மேற்பட்டுச் செல்லுதல் என்க.                                             (3)