உடம்பின் இயல்பு கூறியது

137. வெற்றெ லூம்பைந ரம்பின்வ லித்துமேல்
     வெந்தி லாவிற கேய்ந்தவு டம்பின
கொற்ற லம்பெறு கூழிலம் எங்களைக்
   கொள்வ தேபணி யென்றுகு ரைப்பன

     (பொ-நி.) விறகு ஏய்ந்த உடம்பின.  கூழ் இலம்;  பணி கொள்வதே
என்று குரைப்பன; (எ-று.)

     (வி-ம்.) வலித்தல் - கட்டல். மேல் வெந்து இலா-மேற்புறம் வேகாத.
ஏய்ந்த-ஒத்த.  உள்வயிறு வெந்தும் மேல் தெரியும்  விறகுபோன்ற எலும்பு
வேவவில்லை யென்க.  கொல்தலம் - கொல்லும்  இடமாகிய போர்க்களம்.
கூழ் - நிணக்கூழ்.   கொள்வதே - கொள்ளலாமோ.   பணி - குற்றேவல்.
குரைப்பன-ஓல மிடுவன.                                      (4)