கன்னம், விழி, இயல்பு கூறியது

138.உள்ளொ டுங்கியி ரண்டுமொன் றாகவே
     ஒட்டி ஒட்டிவி டாதகொ டிற்றின
கொள்ளி கொண்டிரண் டேமுழை யுட்புகின்
   குன்று தோன்றுவ போலவி ழிப்பன.

     (பொ-நி.)   ஒட்டுவிடாத   கொடிற்றின;  குன்றுதோன்றுவ  போல
விழிப்பன; (எ-று.)

     (வி-ம்.) இரண்டும்-இரண்டு கன்னமும். கொடிறு-கன்னம்.  கொள்ளி-
கொள்ளிக்கட்டை. ஏம், ஏமம்-பாதுகாப்பான. முழை-குகை. புகின் -ஒருவன்
புகுந்தால் (அப்பொழுது). குன்று-மலை.                          (5)