முதுகு, உந்தி இயல்பு கூறியது 139. | வற்ற லாகஉ லர்ந்தமு துகுகள் | | மரக்க லத்தின்ம றிபுற மொப்பன ஒற்றை வான்தொளைப் புற்றெனப் பாம்புடன் உடும்பு முட்புக்கு றங்கிடும் உந்திய . |
(பொ-நி.) முதுகுகள் மரக்கலத்தின் மறிபுறம் ஒப்பன. பாம்புடன் உடும்பும் உறங்கிடும் உந்திய; (எ-று.) (வி-ம்.) வற்றல் ஆக-வற்றலைப்போல. மரக்கலம்-படகு; மறிபுறம்- காற்றால் மறிந்த புறப்பக்கம். வான்தொளை - பெரியதுளை. புற்று-வளை. புக்கு-புகுந்து, உந்திய-கொப்பூழையுடையன. (6) |