உடல், மயிர், மூக்கு, செவி இயல்பு கூறியது 140. | பாந்தள் நால்வன போலுமு டல்மயிர் | | பாசி பட்டப ழந்தொளை மூக்கின ஆந்தை பாந்தியி ருப்பத்து ரிஞ்சில்புக்கு அங்கு மிங்குமு லாவுசெ வியன. |
(பொ-நி.) பாந்தள் போலும் மயிர்; பழந்தொளை மூக்கின; துரிஞ்சில் உலாவு செவியன; (எ-று.)
(வி-ம்.) பாந்தள் -பாம்பு. நாறுதல்-தொங்குதல். பழம்பாசி-நாட்பட்ட அழுக்கு. பட்ட-பொருத்திய. பாந்தியிருத்தல்-பதுங்கியிருத்தல். துரிஞ்சில்- வௌவால் இனத்தைச் சேர்ந்தது, உலாவு-உலாவித் திரிகின்ற. (7) |