பல், தாலி, தலை உதடு இயல்பு கூறியது

141. கொட்டு மேழியுங் கோத்தன பல்லின
     கோம்பி பாம்பிடைக் கோத்தணி தாலிய
தட்டி வானைத்த கர்க்குந் தலையின
   தாழ்ந்து மார்பிடைத் தட்டும்உ தட்டின.

     (பொ-நி.) கோத்தன்ன  பல்லின;  கோத்து  அணிதாலிய; தகர்க்கும் தலையின; தட்டும் உதட்டின; (எ-று.)

     (வி-ம்.) கொட்டு-மண்வெட்டி.  மேழி - கலப்பையின் மேழி. கோத்த
அன்ன  - கோவைப்படுத்தியது  போன்ற.  கோம்பி - ஓந்தி.  பாம்பிடை-
பாம்பின்கண். தட்டி-மோதி. வான்-விண். தகர்க்கும்-உடைக்கும்.       (8)