பேய்க்குழவிகளின் இயல்பு கூறியது

142. அட்ட மிட்டநெ டுங்கழை காணில்என்
     அன்னை யன்னையென் றாலுங்கு ழவிய
ஒட்ட வொட்டகங் காணில்என் பிள்ளையை்
   ஒக்கு மொக்குமென் றொக்கலை கொள்வன.

     (பொ-நி.)   குழவி,  கழை  காணில்  அன்னை என்று ஆலும் பேய்
ஒட்டகம் காணில் ஒக்கலை கொள்வன; (எ-று.)

    (வி-ம்.) அட்டம்-அண்மை; பக்கம். கழை-மூங்கில். ஆலும்-ஒலியிடும். குழவி - பேயின்
குழந்தைகள்.  ஒட்ட - அண்மையில். பிள்ளை -குழந்தை.
ஒக்கலை-இடுப்பு.                                            (9)