பேயின் பசி இயல்பு கூறியது

143. புயல ளிப்பன மேலும ளித்திடும்
     பொற்க ரத்தப யன்புலி பின்செலக் 
கயலொ ளித்தக டுஞ்சுரம் போல்அகங்
   காந்து வெம்பசி யிற்புறந் தீந்தவும்.

     (பொ-நி.) அபயன்  புலி  பின்  செல,  கயல் ஒளித்த சுரம் போல்
காந்து வெம்பசியில் புறம் தீந்த; (எ-று.)

     (வி-ம்.) புயல் - மேகம். அளிப்பன மேல்-அளிப்பனவற்றிற்கு மேல்.
பொன் அளித்திடும் - பொன்னைக்  கொடுக்கின்ற.  கரம் - கை. அபயன்-குலோத்துங்கன். புலி - புலிக்கொடி. பின்செல - துரத்திக் கொண்டு போக.
கயல் - கயற்கொடி.  சுரம்-பாலைநிலம். புறம்-வெளிப்பக்கம். தீதல் -கரிதல்.
                                                         (10)