காளியைச் சூழ்ந்த பேய் இருப்புக் கூறியது 144. | துஞ்ச லுக்கணித் தாமென முன்னமே் | | சொன்ன சொன்னது றைதொறும் பேயெலாம் அஞ்ச லித்தொரு கால்அக லாமலவ் வணங்கி னுக்கரு காகவி ருக்கவே. | (பொ-நி.) பேய் எலாம், சொன்ன துறைதொறும், அணங்கினுக்கு அருகாக, அஞ்சலித்து, இருக்க; (எ-று.)
(வி-ம்.) துஞ்சல்-(பசியால்)இறத்தல், அணித்து-நெருங்கியது. துறை- இடம். அஞ்சலித்து - வணங்கி. ஒருகால் - ஒருகாலமும். அகலாமல்- விட்டுச்செல்லாமல். அணங்கு-காளி. (11) |