கால்முடப் பேயைக் கூறியது

145. ஆளைச் சீறுக ளிற்றப யன்பொரூஉம்
  அக்க ளத்தில்அ ரசர்சி ரஞ்சொரி
மூளைச் சேற்றில்வ ழுக்கிவி ழுந்திட
   மொழிபெ யர்ந்தொரு கான்முட மானவும்.
 
    (பொ-நி.) அபயன் பொரூஉம் களத்தில் அரசர் சிரம் சொரி மூளைச்
சேற்றில் வழுக்கி விழுந்திட கால்முடமானவும்; (எ-று.)

    (வி-ம்.) ஆள்-ஆண்மை வீரர்கள்.  சீறு-சினந்து கொள்கின்ற களிறு-
யானை. அபயன் - குலோத்துங்கன்.  பொரூஉம் - போர்செய்கின்ற. களம்-
போர்க்களம் சொரி-சிந்துகின்ற. சிரம்-தலை. மொழி-கால் மூட்டு.      (12)