கைம்முடப் பேயைக் கூறியது

146. அந்த நாளக்க ளத்தடு கூழினுக்கு
     ஆய்ந்த வெண்பல்ல ரிசியுரற்புக
உந்து போதினிற் போதகக் கொம்பெனும்
   உலக்கை பட்டுவ லக்கைசொற் றானவும்.

     (பொ-நி.)   வெண்பல் அரிசி, உரல்புக,  உந்து போதினில் போதகக் கொம்பெனும் உலக்கைபட்டு வலக்கை சொற்று ஆனவும்; (எ-று.)

     (வி-ம்.)  அந்தநாள்-குலோத்துங்கன் போர் புரிந்த நாள். அக்களம்-
போர்க்களம்.   அடுதல்  -  சமைத்தல.்   கூழ்  - நிணக்கூழ்.  ஆய்ந்த-
ஆராய்ந்தெடுத்த. வெண்பல் அரிசி-வெள்ளைநிறமுள்ள பற்களாகிய அரிசி.
உந்துதல் - குற்றுதல். போதகக் கொம்பு-யானைத்தந்தம். சொற்று-சொற்றை.
ஊனம்-முடம்.                                             (13)