குருட்டுப் பேயைக் கூறியது 147. | விருத ராசப யங்கரன் முன்னொர்நாள் | | வென்ற சக்கரக் கோட்டத்தி டைக்கொழுங் குருதி யுங்குட ருங்கலந்து அட்டவெங் கூழ்தெ றித்தொரு கண்குரு டானவும். | (பொ-நி.) சக்கரக்கோட்டத்திடை, கூழ் தெறித்து ஒரு கண்குருடானவும்; (எ-று.)
(வி-ம்.) விருதராச பயங்கரன் - குலோத்துங்கன்; வெற்றிச் சின்னங்களையுடைய அரசர்களுக்கு அச்சமுண்டாக்குவோன். சக்கரக்கோட்டம்-சக்கரக்கோட்டம் என்னும் ஊர். குருதி-செந்நீர். அட்ட -சமைத்த. வெம்கூழ்-சுடுகூழ். தெறித்தல்-படுதல். (14) |