ஊமைப்பேயைக் கூறியது

148. வண்டல் பாய்பொன்னி நாடனை வாழ்த்திமா
     மதுரை வெங்களத் தேமது ரிக்கஅட்
டுண்ட கூழொடு நாவுஞ்சு ருண்டுபுக்கு
   உள்வி ழுந்தற ஊமைக ளானவும்

     (பொ-நி.)   மதுரைக்களத்தே,   பொன்னிநாடனை  வாழ்த்திஅட்ட
கூழொடு, நாவும் சுருண்டு ஊமைகளானவும்; (எ-று.)

     (வி-ம்.) வண்டல் - இளஞ்சேறு. பொன்னி-காவிரி. மதுரிக்க-இனிக்க.
அட்டு  - சமைத்து.   நாச்சுருண்டது  - கொதிக்கும்  கூழை  ஆசையால
உட்கொண்டமையின். உள்புக்கு-உள்ளே சென்று.                  (15)