செவிட்டுப் பேயைக் கூறியது

149. ஆனை சாயவ டுபரி ஒன்றுகைத்து
     ஐம்ப டைப்பரு வத்துஅப யன்பொருஞ் 
சேனை வீரர்நின் றார்த்திடும் ஆர்ப்பினில்
   திமிரி வெங்களத் திற்செவி டானவும்.

     (பொ-நி.)  அபயன்,  பரி  உகைத்து பொரும் திமிரி வெங்களத்தில
்வீரர் ஆர்த்திடும் ஆர்ப்பினில் செவிடானவும்; (எ-று.)

     (வி-ம்.)ஆனை-யானை, அடு-கொல்லுகின்ற, பரி-குதிரை, உகைத்து-செலுத்தி;   ஓட்டி.   ஐம்படைப்பருவம்  -   ஐம்படைத்தாலி   அணியும்
இளமைப்பருவம்,  ஐம்படை:  வில்,  வாள், தண்டு, வளை, ஆழி என்பன.
இவைகளின்   உருவைப்   பொன்னாற்   செய்து   இளஞ்சிறார்களுக்குக்
கழுத்திலணிவது  பண்டையோர் மரபு. அபயன்-குலோத்துங்கன். ஆர்ப்பு-
பேரொலி.                                                 (16)