குறட் பேயைக் கூறியது 150. | பண்டு தென்னவர் சாயஅ தற்குமுன் | | பணிசெய் பூதக ணங்கள னைத்தையுங் கொண்டு வந்தபேய் கூடிய போதில்அக் குமரி மாதர்பெ றக்குற ளானவும். |
(பொ-நி.) தென்னவர் சாய, அதற்குமுன், பூதகணங்கள் அனைத்தையும் பேய் கூடிய போதில், அம்மாதர் பெறக், குறள் ஆனவும்; (எ-று.) (வி-ம்.) தென்னவர் - பாண்டியர். சாய - கெட. அதற்குமுன் - சாய்வதற்குமுன். பணி செய்தல் தென்னவர்க் கென்க. பூதகணங்கள்- பூதக்கூட்டம். கூடிய போதில் -அக் குறட்பூதங்களோடு பேய்கள் புணர்ந்த போதில். குமரி மாதர் - இளையகுறட் பெண் பூதங்கள், குறள்-குறுகிய வடிவம். (17) |