கூன் பேயைக் கூறியது 151. | பரக்கு போதக்க டாரம ழித்தநாள் | | பாய்ந்த செம்புன லாடியும் நீந்தியும் குரக்கு வாதம்பி டித்தவி தத்தினில் குடிய டங்கலுங் கூன்முது கானவும். |
(பொ-நி.) கடாரம் அழித்தநாள், செம்புனல் ஆடியும் நீந்தியும், குரங்கு வாதம் பிடித்த விதத்தினில் கூன்முதுகு ஆனவும்; (எ-று.) (வி-ம்.) ஓதம்- கடற்சார்பு. கடாரம் - பர்மா நாட்டின் கடற்கரையை அடுத்த ஓரூர். செம்புனல் - குருதி. ஆடுதல் -நீந்தி விளையாடுதல். குரங்குவாதம் - குரங்குபோற் கூனல் உண்டாக்கும் ஒரு வகை நோய். விதத்தினில்-விதத்தால். குடி அடங்கலும்-சில பேய்க்கூட்டம் முழுதும். (18) |