திறந்த விரற்பேயைக் கூறியது

152. சிங்க ளத்தொடு தென்மது ராபுரி
     செற்ற கொற்றவன் வெற்றிகொள் காலையே
வெங்க ளத்தில் அடுமடைப் பேய்க்குலம்
   வேலை புக்குவி ரல்கள் திறந்தவும்

     (பொ-நி.) வெற்றிகொள் காலை, களத்தில் அடுமடைப பேய்க் குலம்
வேலை புக்கு விரல்கள் திறந்தவும்; (எ-று.)

     (வி-ம்.) செற்ற - அழித்த.  கொற்றவன் - குலோத்துங்கன்.   களம்-
போர்க்களம்.   அடுதல் - சமைத்தல்.  மடைத்தொழில் - சமையற்றொழில்.
வேலை-கடல்.                                              (18)