| காளியின் கட்டில் | 153. | இவ்வண்ணத்த இருதிறமுந் தொழுதிருப்ப | | | எலும்பின்மிசைக் குடர்மென் கச்சிற் செவ்வண்ணக் குருதிதோய் சிறுபூதத் தீபக்கால் கட்டி லிட்டே. |
(பொ-நி.) இவ்வண்ணத்த தொழுதிருப்ப, எலும்பின் மிசை, தீபக்கால் கட்டில் இட்டு; (எ-று.)
(வி-ம்.) இவ்வண்ணத்த - மேலே குறிப்பிட்ட இத்திறத்தனவாகிய பேய்கள். எலும்பின் மிசை - எலும்புக் குவியலின் மீது. திறம் -பக்கம்; குடராகிய கச்சிப்பட்டையால் கட்டிய கட்டில் என்க. தீபக்கால் - கட்டில் கால்களில் ஒருவகை. சிறுபூதக் கட்டிலாகிய தீபக்கால் கட்டில் என்க. (1) |