கட்டில் மேல் அணை

154. பிணமெத்தை யஞ்சடுக்கிப் பேயணையை
     முறித்திட்டும் தூய வெள்ளை 
நிணமெத்தை விரித்துயர்ந்த நிலாத்திகழும்
   பஞ்சசய னத்தின் மேலே.

     (பொ-நி.)   பிணமெத்தை  அடுக்கி,  பேய் அணையை இட்டு, நிண
மெத்தை வரித்துத் திகழும் பஞ்ச சயனத்தின்மேல்; (எ-று.)

 
   (வி-ம்.) அணை -தலையணை;பேய்முறித்து அணையை இட்டு என்க.
நிணம்-கொழுப்பு.  நிலா-ஒளி.  பஞ்சசயனம்-ஐந்து  மெத்தையை அடுக்கிய
படுக்கை.   ஐந்துவகை   மெத்தையாவது:   இலவம்   பஞ்சு,  செம்பஞ்சு,
வெண்பஞ்சு, மலர்,  அன்னத்தின் இறகுஇவைகளைக்கொண்டு தனித்தனியே
அமைக்கப்படுவது.                                            (2)