காளியின் இருப்பு 155. | கெடாதபடி கெடுஞ்செழியர் கெடும்பொழுதின் | | இடும்பிண்டி பாலம் ஏந்தி இடாகினிகள் இருமருங்கும் ஈச்சோப்பிப் பணிமாற இருந்த போழ்தின். | (பொ-நி.) பிண்டிபாலம் ஏந்தி, இடாகினிகள் ஈச்சோப்பிப் பணிமாற இருந்த போழ்தின்; (எ-று.)
(வி-ம்.) கெடும் செழியர் - நன்மையற்ற பாண்டியர். கெடும் பொழுதின்-தோற்று ஓடுங்கால். கெடாதபடி-அங்ஙனம் ஓடாதவாறு. இடும்- குலோத்துங்கன் எறியும். பிண்டி - ஒருவகைப் படை. பாலம் - மழு; எறிபடைகள். இடாகினிகள் - பிணந்தின்னும் பெண்பேய். ஈச்சோப்பி- ஈயோட்டும் கருவிப் பொருள். பணிமாற -மாறிமாறி வீச. (3) |
|
|