நெடும்பேய் செய்தி கூறியது 156. | அடல்நாக வெலும்பெடுத்து நரம்பிற் கட்டி | | அடித்தடியும் பிடித்துஅமரின் மடிந்த வீரர் குடர்சூடி நிணச்சட்டை யிட்டு நின்ற் கோயில்நா யகிநெடும்பேய் கும்பிட்டு ஆங்கே. |
(பொ-நி.) தடிபிடித்துக், குடர்சூடி, நிணச்சட்டை இட்டு நின்ற நெடும்பேய் கும்பிட்டு; (எ-று.)
(வி-ம்.) நாகம் - யானை. நரம்பு - யானையின் நரம்பு. அடித்தடி-தலையடிமைத் தொழிலுக்கடையாளமான தடி. அமர் - போர், சூடி- மாலையாகச் சூடி, நிணம்-கொழுப்பு. நாயகி-காளி. நெடும்பேய் -தலைமைப் பேய். (4) |