நெடும்பேய் காளிக்குக் கூறல் 157. | சுரகுருவின் தூதாகி யமன்பாற் செல்வோன் | | துணித்துவைத்த சிரம்அன்று தின்றபேயைச் சிரம்அரிய வதற்குறவாய் ஒளித்துப் போந்த் சிலபேயைத் திருவுள்ளத் தறிதி யன்றே. |
(பொ-நி.) சிரம் தின்ற பேயை, சிரம்அரிய, அதற்கு உறவாய் ஒளித்துப் போந்த பேயை அறிதி அன்றே; (எ-று.)
(வி-ம்.) சுரகுரு -சோழன் ஒருவன். செல்வோன்-சென்ற பேய்மகன். துணித்தல் - வெட்டுதல் (உண்ணுதற்குத் துணித்த தென்க.) சிரம் - தலை. அன்று-அந்தநாள். தின்ற-களவாடித்தின்ற. அரிய-நீ அரிந்துவிட. உறவாய்- தொடர்புற்று நண்புரிமை பூண்ட. (5) |