முதுபேய் காளி திருமுன் அணுகியது கூறியது

159. அழைக்க வென்றலும் அழைக்க வந்தணுகி
  அஞ்சி யஞ்சிஉன தாணையின் 
பிழைக்க வந்தனம்பொ றுத்தெ மக்கருள்செய்
   பெண்ண ணங்கெனவ ணங்கவே.

     (பொ-நி)  "அழைக்க" என்றலும், அழைக்க (முதுபேய்)வந்து அணுகி
அஞ்சி "பிழைக்க வந்தனம்; அருள்செய்" என வணங்க; (எ-று.)

    (வி-ம்.) என்றலும்-காளி என்றலும் அழைக்க -நெடும்பேய் அழைக்க.
ஆணையில் அடங்கிப் பிழைக்க வந்தனம் என்க. அணங்கு-தெய்வம்.   (7)