உமை வணக்கம் 15. | செய்யதிரு மேனியொரு பாதிகரி தாகத் | | தெய்வமுதல் நாயகனை எய்தசிலை மாரன் கையின்மலர் பாதமலர் மீதும்அணு காநம் கன்னிதன் மலர்க்கழல்கள்சென்னிமிசை வைப்பாம். | 16. | கறுத்தசெழி யன்கழல்சி வப்பவரை யேறக் | | கார்முகம்வ ளைத்துஉதியர் கோமகன்முடிக்கண் பொறுத்தமலர் பாதமலர் மீதணிய நல்கும் பூழியர்பி ரான்அபயன் வாழ்கஇனி தென்றே. | (பொ-நி.) செழியன் வரை ஏற வளைத்து, உதியர் கோமகன் மலர் பாதமலர் மீதணிய நல்கும் அபயன் வாழ்க என்று, கரிதாக எய்த சிலைமாரன் மலர் அணுகா கன்னிதன் கழல்கள் சென்னி மிசை வைப்பாம்; (எ-று.) (வி-ம்.) செய்ய-சிவந்த. கரிதாக எய்த மாரன் என்க. தெய்வமுதல் நாயகன்-சிவன். மாரன் - மன்மதன். மாரன்கை; ஆறன்தொகை. கன்னி -உமை. கறுத்த-சினந்து பகைத்த. செழியன்-பாண்டியன். கழல்-பாதம். வரை- மலை. கார்முகம் - வில். உதியர் - சேரர்.பொறுத்த-சூடிய. நல்கும் - அருள் செய்யும். பூழியர் - பூழி நாட்டார். அபயன் - குலோத்துங்கன். அபயன் சேரபாண்டியர்களை அடிமைப்படுத்தியமை குறிக்கப்பட்டது. (15, 16) |
|
|