முதுபேய்க்குக் காளி மொழிந்தது கூறியது

160. அருத்தி யிற்பிழைநி னைத்த கூளியை
     அறுத்த வன்தலைய வன்பெறப் 
பொருத்தி அப்பிழைபொ றுத்த னம்பிழை
   பொறாத தில்லையினி யென்னவே.

     (பொ-நி.) "கூளியை அறுத்த தலையை அவன் பெறப்பொருத்தி, அப் பிழை பொறுத்தனம். இனிப் பொறாத பிழை இல்லை" என்ன; (எ-று.)

     (வி-ம்.) அருத்தி -(தலையின் மேல் வைத்து) ஆசை, பிழை- குற்றம்,
களவாடல். கூளி - பேய். வன் - வலிய. தலை - போயினதுதலை. அவன்-
தூதுசென்றவன். பொருத்தி-அமைத்து.                          (8)