முதுபேய் மொழிந்தது கூறியது 161. | உய்ந்து போயினம்உ வந்தெ மக்கருள | | ஒன்றோ டொப்பனவொ ராயிரம் இந்திர சாலமுள கற்று வந்தனென் இருந்து காணெனஇ றைஞ்சியே. | (பொ-நி.) "நீ அருள, உய்ந்து போயினம்; ஆயிரம் இந்திர சாலம்உள; கற்றுவந்தனன் காண்" என இறைஞ்சி; (எ-று.)
(வி-ம்.) உய்தல் -பிழைத்தல். உவந்து-மகிழ்ந்து. ஒன்றோடொப்பன- ஒன்றேபோல. இந்திரசாலம்-மாயவித்தை. இதனை உலக வழக்கில் 'கண் கட்டி வித்தை' என வழங்குவர். இறைஞ்சி-வணங்கி. (9) |