யானைத் தலையுடன் குறையுடலும் காட்டிய
இந்திரசாலம் கூறியது

163. இக்க ரித்தலையிடன் வாயி னின்று உதிர
     நீர்குடித்து உருமி டித்தெனக்  
கொக்க ரித்து அலகை சுற்ற மற்றிவை
   குறைத்த லைப்பிணம்மி தப்பபார்.

     (பொ-நி.) "அலகை,  கரித்தலையின் வாயினின்று,  உதிரநீர் குடித்து, கொக்கரித்துச் சுற்ற, குறைத்தலைப் பிணம் மிதப்ப" பார், (எ-று.)

     (வி-ம்.) கரி - யானை, உதிரநீர் -குருதி. உரும்-இடி. கொக்கரித்தல்-
இரைச்சல்இடல். அலகை-பேய்.  குறைத்தலைப்பிணம் - யானையின் தலை
குறைந்த உடல்.                                            (11)