குருதி வெள்ளம் காட்டிய இந்திரசாலம் கூறியது

166. அற்ற தோளிவைஅ லைப்ப பார்! உவை
  யறாத நீள்குடர்மி தப்பபார்
இற்ற தாள்நரியி ழுப்பபார்! அடி
   யிழுக்கு மூளையில்வ ழுக்கல்பார்!

    (பொ-நி.) தோள்  அலைப்ப  பார்;  குடர் மிதப்ப பார்; தாள் நரி
இழுப்ப பார்; மூளையில் அடி வழுக்கல் பார்; (எ-று.)

    (வி-ம்.) அற்ற - விடுபட்ட. அலைப்ப- குருதிவெள்ளம் அலைத்துச்
செல்லலை. இற்ற - உடலினின்றும் இற்று விழுந்த. தாள் - கால்கள். அடி-
பாதம். இழுக்கும்-வழுக்கும். வழுக்கல்-கால்கள் வழுக்குதல்.         (14)