அன்னையர் எழுவர் வணக்கம் 17. | மேதி புள்ளலகை தோகை யேறுவணம் | | வேழம் என்றகொடி ஏழுடைச் சோதி மென்கொடிகள் ஏழின் ஏழிருது ணைப்ப தந்தொழநி னைத்துமே. | 18. | கேழல் மேழிகலை யாளி வீணைசிலை | | கெண்டை என்றினைய பல்கொடி தாழ மேருவிலு யர்த்த செம்பியர்த னிப்பு லிக்கொடித ழைக்கவே. | (பொ-நி) பல்கொடி தாழ, உயர்ந்த புலிக்கொடி தழைக்க, கொடி ஏழுடை, கொடிகள் ஏழின், ஏழிரு துணைப்பதம் தொழ நினைத்தும்; (எ-று) (வி-ம்.) ஏழு(சத்த)மாதர்களில் சாமுண்டிக்கு எருமையும், அபிராமிக்கு அன்னமும், வராகிக்கு அலகையும், கௌமாரிக்கு மயிலும், மயேசுவரிக்கு எருதும், நாராயணிக்குக் கருடனும், இந்திராணிக்கு யானையுங்கொடிகளாம். மேதி-எருமை. புள்-அன்னம். அலகை-பேய். தோகை-மயில். ஏறு-எருது. உவணம்-கருடன்: வேழம்-யானை. கொடிகள ்ஏழின் - கொடி போன்ற அன்னையர் எழுவர். கேழல் - பன்றி. மேழி - கலப்பை. கலை-மான். யாளி-சிங்கம். சிலை-வில். கெண்டை-மீன், தாழ - தாழ்வடைய, பணிய. மேருவில்-இமயமலையில். செம்பியர்-சோழர். கேழல் முதலியன பிற அரசர் கொடிகள் பல அரசரையும் அடிப்படுத்தியமை குறிக்கப்பட்டது. (17. 18) |
|
|