இதுவும் அது 170. | சுற்றநி ணத்துகில் பெற்றனம் என்று | | சுலாவுவெ றுங்கையவே அற்றகு றை த்தலை யென்றுவி சும்பை அதுக்குமெ யிற்றினவே. |
(பொ-நி.) துகில்பெற்றனம் என்று சுலாவுகைய; விசும்பை அதுக்கும் எயிற்றின; (எ-று.) (வி-ம்.) சுற்ற - சுற்றிக்கொள்ள, நிணத்துகில்-கொழுப்பாகிய ஆடை. சுலாவுதல் - சுற்றிக் கொள்ளுதல். வெறும் கைய - வெறுமையாகிய கைகளையுடைய. விசும்பு-வெறுவெளி. அதுக்குதல் -மெல்லுதல். எயிறு-பல். (18) |