இதுவும் அது

171. கயிற்றுறி யொப்பதொர் பேய்வறி தேஉடல்
     கௌவின தொக்கவிரைந்து
எயிற்றைய துக்கிநி லத்திடை பேய்கள்
   இரைத்தன மேல்விழவே.

     (பொ-நி.)   பேய்,  கௌவின  தொக்க,  எயிற்றை  அதுக்கி  விழ,
பேய்கள் நிரைத்தன; (எ-று.)

     (வி-ம்.)  உறிகயிறு ஒப்பது - உறியின்  கயிற்றை  ஒத்தது.  நரம்பு
தோன்ற மெலிந்திருத்தலால், கயிற்றுறி ஒப்பாயிற்று. எயிறு-பல்,  அதுக்கி-
கடிக்க. இரைத்தன-கூச்சலிட்டன.                              (19)